திருப்பத்தூரில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


திருப்பத்தூரில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 29 Dec 2016 8:48 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் பகுதியில் காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து தோழி என்ற கூட்டமைப்பு மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு வக்கீல் என்.அமுதானந்தன் தலைமை தாங்கினார். தோழி திட்ட மாநில ஒருங்கிணை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பகுதியில் காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து தோழி என்ற கூட்டமைப்பு மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்துக்கு வக்கீல் என்.அமுதானந்தன் தலைமை தாங்கினார். தோழி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பிரசாந்த், என்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேஞ்ச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஏ.பழனிவேல்சாமி வரவேற்றார். செயல் இயக்குனர் டாக்டர் பா.சந்திரா விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் சேலம் – தருமபுரி கூட்டு சாலையில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலையிடம், பாலியல் தொந்தரவு இல்லா நிலை, பணி நிரந்தரம், மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினார்கள். முடிவில் சேஞ்ச் தொண்டு நிறுவன அமைப்பாளர் ஆர்.சரஸ்வதி நன்றி கூறினார்.


Next Story