தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் இன்று நடக்கிறது


தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 Dec 2016 1:30 AM IST (Updated: 29 Dec 2016 8:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகாவுக்கு ஒரு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகாவுக்கு ஒரு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது. தூத்துக்குடி தாலுகாவில் மீளவிட்டான்–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வேளுர் புதுக்குடி கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் காயல்பட்டினம் தென்பாகம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் திருப்பணிபுத்தன்தருவை கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் முடுக்கலாங்குளம் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் பல்லாகுளம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் செமப்புதூர் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் சவரிமங்கலம் கிராமத்திலும் அந்தந்த தாசில்தார் தலைமையில் முகாம் நடக்க உள்ளது.

மனுக்கள் கொடுக்கலாம்

இந்த முகாமில், பொதுமக்கள் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை மனுக்களாக கொடுக்கலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story