பள்ளிகொண்டா அருகே வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த போலி அதிகாரிகள் 2 பேர் கைது
பள்ளிகொண்டா அருகே வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த போலி அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– வாகனங்களை மறித்து பணம் வசூல் பள்ளிகொண்டா இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற கனரக வாகனங்களை
அணைக்கட்டு,
பள்ளிகொண்டா அருகே வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த போலி அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வாகனங்களை மறித்து பணம் வசூல்பள்ளிகொண்டா இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற கனரக வாகனங்களை மறித்து 2 பேர் பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். அப்போது வாகன ஓட்டிகள் நீங்கள் யார் என்று கேட்ட போது, பணம் வசூல் செய்து கொண்டிருந்தவர்கள் வரி வசூல் அதிகாரிகள் என கூறியுள்ளனர். பணம் தரமறுத்த வாகன ஓட்டிகளை அவர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர்.
அந்த சமயத்தில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 50–க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையில் நின்று கொண்டிருந்ததால் லாரி டிரைவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகன் எதற்காக லாரிகள் நிறுத்தி உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டிரைவர்கள் இறைவன்காடு பெட்ரோல் பங்க் அருகே வரி வசூல் அதிகாரிகள் லாரிகளில் ஏற்றப்படும் பாரங்கள் சரியான அளவில் உள்ளதா என சோதனை செய்து வருகிறார்கள் என்று கூறினர்.
2 பேர் கைதுஅதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் சோதனை செய்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த அயூப் மகன் ஜிலான் (வயது 27), வேலூர் கன்சால்பேட்டையை சேர்ந்த நவாப் சாகிப் மகன் முபாரக் (27) என்பதும், ஜிலான் லாரி டிரைவராகவும், முபாரக் கிளீனராகவும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள், லாரியில் செல்லும் போது வரி வசூல் அதிகாரிகள் எங்களிடம் இதுபோன்ற முறையில்தான் பணம் வாங்குவார்கள் அதனால் நாங்களும் இதுபோன்று செய்யலாம் என திட்டமிட்டு வரி வசூல் அதிகாரிகளை போல் லாரிகளை மறித்து பணம் வசூல் செய்தோம் என கூறினர்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.