பி.அக்ரகாரம் முனியப்பன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.1.94 ஆயிரம் காணிக்கை வசூல்


பி.அக்ரகாரம்  முனியப்பன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.1.94 ஆயிரம் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:00 AM IST (Updated: 29 Dec 2016 9:00 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரகாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2–வது செவ்வாய்க்கிழமையன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரகாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2–வது செவ்வாய்க்கிழமையன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவின்பேரில் தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் மேற்பார்வையில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பணியின் போது தன்னார்வ தொண்டர்கள், பக்தர்கள், இளைஞர்கள் சங்கத்தினர் கோவில் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியலில் மொத்தம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 464 காணிக்கை வசூல் ஆனாது குறிப்பிடத்தக்கது.


Next Story