அரூரில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
அரூரில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அம்பேத்கர் நகரில் 13,14,15 மற்றும் 16 வார்டுகள் உள்ளது. இந்த 4
அரூர்,
அரூரில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அம்பேத்கர் நகரில் 13,14,15 மற்றும் 16 வார்டுகள் உள்ளது. இந்த 4 வார்டுகளிலும் மொத்தம் 1,050 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காததை கண்டித்து நேற்று பொதுமக்கள் அரூரில், தீர்த்தமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அரூர் உதவி கலெக்டர் கவிதா, வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்புஅப்போது பொதுமக்கள் கூறுகையில், அம்பேத்கர் நகருக்குட்பட்ட 4 வார்டுகளிலும் 1,050 ரேஷன்கார்டுகள் உள்ளது. இந்த கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் கேட்டால் பொருட்கள் தீர்ந்து விட்டது என்று விற்பனையாளர் கூறுகிறார். அத்தியாவசிய பொருட்களை விற்பனையாளர், வெளியாட்களுக்கு விற்பனை செய்து விடுகிறார். இதனால் ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ரேஷன் கடையில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் முறையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.