தர்மபுரியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


தர்மபுரியில்  அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 9:05 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியை அடுத்த கடகத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள், தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்

தர்மபுரி,

தர்மபுரியை அடுத்த கடகத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள், தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை துணை பயிற்சி நிலைய முதல்வர் ஜெகந்நாதன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரசு ஐ.டி.ஐ. அளவில் முதல் இடம் பிடித்த 3 மாணவர்கள் வருகிற ஜனவரி மாதம் மேட்டூரில் நடைபெறும் கோவை மண்டல அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story