நெல்லை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா


நெல்லை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 30 Dec 2016 1:30 AM IST (Updated: 29 Dec 2016 9:08 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை,

நெல்லை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ராமர், பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

காலை 8.30 மணிக்கு கும்பம் வைத்து பூஜைகள் தொடங்கின. 10 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு பேராசிரியர் சிவ சத்தியமூர்த்தியின் பக்தி சொற்பொழி நடந்தது. மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்

நெல்லை உடையார்பட்டி பை–பாஸ் ரோட்டையொட்டி உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு லட்சுமி யாகம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி, 7 மணிக்கு தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு திருப்படி பூஜை ஆகியவை நடைபெற்றன.

நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதேபோல் பல்வேறு கோவில்களில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று கன்னிமூல கணபதிக்கும், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர் ஊருக்கு மேற்கு திசையில் ராப்பைகுளம் அருகே குபேர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலையில் வாசுதேவநல்லூர் வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் இருந்து 6–வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.

இதில் 504 பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் காலை 10 மணி அளவில் தொடங்கியது. ரதவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக பால்குட ஊர்வலம் சென்று குபேர ஆஞசநேயர் கோவிலை அடைந்தது.

சிறப்பு நிகழ்ச்சிகள்


ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து சுந்தர்ராம் சுவாமிகளின் பக்தி பஜனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது.

விழாவில் வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர் தாலுகாவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story