காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி வங்கி ஊழியர் பலி


காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி வங்கி ஊழியர் பலி
x
தினத்தந்தி 30 Dec 2016 3:45 AM IST (Updated: 29 Dec 2016 9:09 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தென்னனஅள்ளியைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 27). இவர் கிருஷ்ணகிரியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். ராஜகுரு நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காவேரிப்ப

காவேரிப்பட்டணம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தென்னனஅள்ளியைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 27). இவர் கிருஷ்ணகிரியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். ராஜகுரு நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காவேரிப்பட்டணம் அணை சாலை மேம்பாலம் பக்கமாக அவர் சென்ற போது ராஜகுருவிற்கு போன் வந்தது.

இதனால் அவர் பாலத்தின் ஓரத்தில் நின்று போனில் பேசினார். அப்போது பெங்களூருவில் இருந்து காய்கறி பாரம் ஏற்றி கொண்டு கோவை நோக்கி வந்த டெம்போ வேன் அவர் மீது மோதியது. இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியான ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேன் டிரைவரான கெங்கலேரியைச் சேர்ந்த நாசர் (24) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story