நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 384 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 384 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 9:13 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வடைந்து 384 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முட்டை விலை உயர்வு நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 379 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசி

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வடைந்து 384 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 379 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 384 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–390, ஐதராபாத்–369, விஜயவாடா, தனுகு–387, பார்வாலா–386, மும்பை–410, மைசூரு–375, பெங்களூரு–380, கொல்கத்தா–417, டெல்லி–405.

கறிக்கோழி விலை

கறிக்கோழி விலை கிலோ ரூ.75–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி கிலோ விலை ரூ.78 ஆக உயர்ந்து உள்ளது.

முட்டைக்கோழி விலை கிலோ ரூ.56–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதும், முட்டையின் நுகர்வு தன்மை அதிகரித்து வருவதும் முட்டை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் பிறமண்டலங்களில் விலை உயர்வுக்கு ஏற்ப நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளதை தொடர்ந்து கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதையொட்டியும் முட்டை விலை உயர்ந்து உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story