மோகனூர் அருகே விபத்தில் ஆண் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள என்.புதுப்பட்டிக்கும், வளையப்பட்டிக்கும் இடையில் ஒரு பாலத்தின் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற ஏதாவது ஒரு வா
மோகனூர்,
நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள என்.புதுப்பட்டிக்கும், வளையப்பட்டிக்கும் இடையில் ஒரு பாலத்தின் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற ஏதாவது ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று இருக்கலாம். இதில் அவர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என தெரியவில்லை. அவர் அணிந்திருந்த பனியன் உள்ளே ஒரு பொட்டலத்தில் பொரிக்கப்பட்ட மீன் இருந்தது. அவர் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்தவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் மோகனூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.