தூத்துக்குடி அருகே கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை


தூத்துக்குடி அருகே கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர்  போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2016 1:00 AM IST (Updated: 29 Dec 2016 9:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டியும், குத்தியும் கொலை செய்த வழக்கில் 2 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டியும், குத்தியும் கொலை செய்த வழக்கில் 2 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்டிகொலை

தூத்துக்குடி ராஜபாளையம் மாதாநகரை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகன் அரிகிருஷ்ணன்(வயது 35). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பணி செய்யும் இடத்தில் தங்கி வேலை பார்ப்பது வழக்கம். நேற்று முன்தினம் வேப்பலோடையில் புதிதாக ஒரு வீடு கட்டுமான பணி தொடங்குவதாக இருந்தது. இங்கு தங்கி பணியாற்றுவதற்காக அரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில், அரிசி மற்றும் காய்கறிகளுடன் புறப்பட்டார். அப்போது மர்ம ஆசாமிகள் அரிகிருஷ்ணனை விரட்டி சென்று கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்தனர்.

2 பேர் சிக்கினர்

இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்,‘ அரிகிருஷ்ணன் வேலைக்கு புறப்பட்ட போது, தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த உலகநாதன், ஆத்தியப்பன் ஆகிய 2 பேரும் வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து மது குடித்து உள்ளனர். அப்போது, கடந்த 2014–ம் ஆண்டு மாதாநகரை சேர்ந்த பிரபல ரவுடி பட்டு என்ற பட்டுராஜ் சாயல்குடியில் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேசியுள்ளனர். இதில், அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த உலகநாதன், ஆத்தியப்பன் ஆகியோர் சேர்ந்து அரிகிருஷ்ணனை தாக்கியுள்ளனர். அவர்களை அரிகிருஷ்ணனும் தாக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை

ஆத்திரம் தீராத அந்த 2 பேரும் கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து அரிகிருஷ்ணனை பட்டாக் கத்தியால் தாக்க முயற்சித்துள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அரிகிருஷ்ணன் வேகமாக புறப்பட்டு சென்றுள்ளார். அவரை அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து கத்தியவாறு துரத்தி சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் அவருடைய மோட்டார் சைக்கிளை உலகநாதனும், ஆத்தியப்பனும் மடக்கி நிறுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து அரிகிருஷ்ணன் தப்பி ஓடியுள்ளார். அவரை துரத்தி சென்று பட்டாக்கத்தியால் வெட்டியும், குத்தியும் அவர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து அந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story