விருத்தாசலம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்ததால் விபரீத முடிவு
விருத்தாசலம் அருகே கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பா சாகுபடி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பா சாகுபடிதமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வயல்களில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மன வேதனையில் விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பயிர் கருகியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். அதுபற்றிய விவரம் வருமாறு:–
தற்கொலைவிருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரை சேர்ந்தவர் மான்துரை (வயது60), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் மான்துரை கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணியன் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்த மான்துரை விளை நிலத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது மான்துரை தனது விளை நிலத்தின் அருகில் இருந்த மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர். உயிரிழந்த விவசாயி மான்துரைக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசாரும், வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.