கும்பகோணம் அருகே பள்ளி மாணவர் கொடூரமாக வெட்டிக் கொலை கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பள்ளி மாணவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கூட்டுறவு நகரைச்சேர்ந்தவர் நிஜாம்மைதீன். இவருடைய மகன் அப்துல்ம
கும்பகோணம்,
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பள்ளி மாணவர்தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கூட்டுறவு நகரைச்சேர்ந்தவர் நிஜாம்மைதீன். இவருடைய மகன் அப்துல்மஜீக் (வயது16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளி ஒன்றில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அப்துல்மஜீக் தாராசுரம் கீழத்தெருவில் உள்ள தனது உறவினரை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அப்துல்மஜீக் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அப்போது அரைமணி நேரத்திற்குள் வந்து விடுகிறேன் என கூறி உள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
வெட்டுக்காயங்களுடன் பிணம்இதையடுத்து அவரது பெற்றோர் அப்துல்மஜீக்கை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்துல்மஜீக்கின் பெற்றோர் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அப்துல்மஜீக்கை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை பைபாஸ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலத்தின் அடியில் ஒருவர் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுவாமிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மற்றும் கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
கொலை செய்தது யார்?அப்போது பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தவரின் கழுத்து, காது, வாய் உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் பிணமாக கிடப்பது காணாமல் போன மாணவர் அப்துல்மஜீக் ஆக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இது குறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பிணமாக கிடந்தது அப்துல்மஜீக் என்பது தெரியவந்தது.
உடனடியாக அப்துல்மஜீக் உடலை கைப்பற்றிய போலீசார் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் அப்துல்மஜீக்கை கொடூரமாக கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிப்படை அமைப்புமேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.