ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து சேலத்தில் தடையை மீறி வாலிபர் சங்கத்தினர் மறியல் 40 பேர் கைது


ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து சேலத்தில் தடையை மீறி வாலிபர் சங்கத்தினர் மறியல் 40 பேர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 29 Dec 2016 10:39 PM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து, சேலத்தில் தடையை மீறி ஊர்வலம்–மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டம் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8–ந

சேலம்,

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து, சேலத்தில் தடையை மீறி ஊர்வலம்–மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8–ந் தேதி மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட செலவுக்கு ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுக்க முடியாமல் பரிதவித்து வருவதால் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டை துணை தபால் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, கந்தம்பட்டி பைபாசில் உள்ள ஒரு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக மேற்கு மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

மறியல்–40 பேர் கைது

இதனிடையே, ஏற்கனவே அறிவித்தபடி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், பொதுமக்களும் நேற்று காலை செவ்வாய்பேட்டை துணை தபால் நிலையம் முன்பு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் செந்தில் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பியவாறு தடையை மீறி ஊர்வலத்தை தொடங்கினர். அப்போது, ஊர்வலமாக செல்ல முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு சிவதாபுரம் சாலையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியல் செய்த மாநில தலைவர் செந்தில், சேலம் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் உள்பட 40 பேரை கைது செய்தனர். இவர்களில் 30 பேர் பெண்கள் ஆவர். பின்னர், கைது செய்த அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அவர்களை போலீசார் மாலையில் விடுவித்தனர்.


Next Story