விபத்தில்லாமல் அரசு பஸ்களை இயக்கிய டிரைவர்கள், பணியாளர்கள் 55 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வட்டார போக்குவரத்து அதிகாரி வழங்கினார்
விபத்தில்லாமல் அரசு பஸ்களை இயக்கிய டிரைவர்கள், பணியாளர்கள் 55 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வட்டார போக்குவரத்து அதிகாரி வழங்கினார். கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம், தஞ்சை வட்டார போக்குவ
தஞ்சாவூர்,
விபத்தில்லாமல் அரசு பஸ்களை இயக்கிய டிரைவர்கள், பணியாளர்கள் 55 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வட்டார போக்குவரத்து அதிகாரி வழங்கினார்.
கருத்தரங்கம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம், தஞ்சை வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. தஞ்சை கரந்தையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
தொழில்நுட்ப துணை மேலாளர் ஆதப்பன், போக்குவரத்து துணை ஆணையர் சிவக்குமரன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், கிளை மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தஞ்சை வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வரவேற்றார்.
55 பேருக்கு பாராட்டு சான்றிதழ்விழாவில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக்கழக கிளை அலுவலகமான 11 அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் பஸ்களை இயக்கிய 21 டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விபத்து நடைபெறாத வண்ணம் பஸ்களை முறையாக பராமரித்த தொழில்நுட்ப பணியாளர்கள், பணியாளர்கள் 34 பேருக்கும் என மொத்தம் 55 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை வட்டாரப்போக்குவரத்து அதிகாரி ராஜ்குமார் வழங்கி பேசினார்.
கருத்தரங்கில் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோவன், அருணாசலம் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை கோட்ட மேலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.