கொரடாச்சேரி அருகே குளத்தில் மூழ்கி வியாபாரி சாவு தாமரைப்பூ பறித்தபோது பரிதாபம்


கொரடாச்சேரி அருகே குளத்தில் மூழ்கி வியாபாரி சாவு தாமரைப்பூ பறித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 29 Dec 2016 10:54 PM IST (Updated: 29 Dec 2016 10:54 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே தாமரைப்பூ பறித்த போது குளத்தில் மூழ்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார். கீரை வியாபாரி சாவு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). கீரை வியாபாரி. இவர் கோவிலுக்கு தாமரை பூக்களை பறித்து கொடுப்பது வழக்கம். இந்த நிலை

திருவாரூர்,

கொரடாச்சேரி அருகே தாமரைப்பூ பறித்த போது குளத்தில் மூழ்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

கீரை வியாபாரி சாவு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). கீரை வியாபாரி. இவர் கோவிலுக்கு தாமரை பூக்களை பறித்து கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று கொரடாச்சேரி அருகே கொத்தவாசல் என்ற ஊரில் உள்ள குளத்தில் தாமரை பூக்களை பறிக்க மனைவி கமலாவுடன் சென்றார். அப்போது குளத்தில் இறங்கி தாமரை பூக்களை பறித்து கொண்டு இருந்தபோது செல்வராஜ் திடீரென மயங்கி விழுந்து மூழ்கினார். தண்ணீரில் செல்வராஜ் மூழ்குவதை கண்ட கமலா குளக்கரையில் இருந்து அலறி அடித்து ஓடி வந்து செல்வராசை தூக்கினார். ஆனால் கமலத்தால் செல்வராசை தூக்க முடியவில்லை. இதனால் அந்த வழியாக சென்றவர்களை உதவிக்கு அழைத்து செல்வராசை மீட்டார். அப்போது செல்வராஜ் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story