விழுப்புரம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் தொடங்கியது
விழுப்புரம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி உற்சவம் விழுப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நேற்று பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கிய
விழுப்புரம்,
விழுப்புரம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசி உற்சவம்விழுப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நேற்று பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை முதல் வைகுண்டவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி புறப்பாடு நடந்தது. இதில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வருகிற 7–ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடக்கிறது.
சொர்க்கவாசல் திறப்புவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதன் பிறகு மறுநாள் திங்கட்கிழமை (9–ந்தேதி) இராப்பத்து உற்சவம் தொடங்கி 18–ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மணி, ஆய்வாளர் சரவணன், அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார், திருமஞ்சன கைங்கர்யதாரர்கள் செய்து வருகின்றனர்.