திருப்பதியில் 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளி மீது போலீசில் புகார்


திருப்பதியில் 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளி மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 11:29 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதியில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:– கூலித்தொழிலாளி தமிழகத்தைச் சேர்ந்தவர் லட்

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதியில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–

கூலித்தொழிலாளி

தமிழகத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 48). இவர், கடந்த 16 ஆண்டுகளாக திருப்பதியில் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். கணவர் இறந்தபோது, லட்சுமிக்கு சின்னஞ்சிறு வயதில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். லட்சுமி கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.

அவருக்கும், திருப்பதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வம்சி என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும், திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 7 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரு மகள்களும், மகனும் வம்சியோடு வீட்டில் இருந்தனர். லட்சுமி ஊருக்குச் சென்று விட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வம்சி, 14 வயது மதிக்கத்தக்க லட்சுமியின் மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பலாத்காரம்

இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவரை மிரட்டி வைத்துள்ளார். அதேபோல், 12 வயது மதிக்கத்தக்க இளைய மகளை, வம்சி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இரு மகள்களும் வீட்டில் வம்சியை பார்த்தாலே பயந்து நடுங்கினர்.

உறவினர் வீட்டில் இருந்து திருப்பதிக்கு வந்த லட்சுமி, இருமகள்கள் மற்றும் மகனை அழைத்துக் கொண்டு மற்றொரு உறவினர் வீடான சந்திரகிரி அருகே உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து திருப்பதிக்குப் புறப்பட்டபோது, அவருடைய இரு மகள்களும், திருப்பதிக்கு வரமாட்டோம் எனக்கூறி அழுதனர். இதுபற்றி இரு மகள்களிடம் லட்சுமி விசாரித்தபோது, இரு மகள்களும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுதனர்.

போலீஸ் வலைவீச்சு

அதிர்ச்சி அடைந்த லட்சுமி இரு மகள்களை அழைத்துக்கொண்டு திருப்பதியை அடுத்த எம்.ஆர்.பள்ளி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். லட்சுமி, வம்சி மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவப் பரிசோதனைக்காக இரு சிறுமிகளை திருப்பதி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வம்சி தலைமறைவாகி விட்டார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story