கடத்தி கொண்டு வரப்பட்ட 9 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு கடத்தி வந்தவர் யார்? போலீசார் விசாரணை


கடத்தி கொண்டு வரப்பட்ட 9 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு கடத்தி வந்தவர் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:45 AM IST (Updated: 30 Dec 2016 12:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 9 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தி வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை

சென்னை,

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 9 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தி வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சோதனை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் இரவு நேரங்களில் ரெயில்களில் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரெயில்களில் சோதனை செய்தனர்.
அப்போது மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்டிரல் வரை இயக்கப்படும் ‘ஹவுரா’ எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 3.30 மணியளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து பிளாட்பாரம் 9-ல் நின்று கொண்டிருந்தது.

அந்த ரெயிலில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மர்மபை ஒன்று கிடந்தது. அந்த பையை எடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் பிரித்துப்பார்த்தனர்.

கஞ்சா பொட்டலங்கள்

அதில் சுமார் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் வந்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா பொட்டலங்களை எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story