பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம் நடத்த முயற்சி தந்தை பெரியார் தி.க.வினர் 6 பேர் கைது
கோவை, 50 நாட்கள் ஆகியும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டத்தை நடத்த முயன்ற தந்தை பெரியார் தி.க.வினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நூதன போராட்டம் 50 நாட்கள் ஆகியும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை என்பதால் மக்கள் படும் துன்பத்
கோவை,
50 நாட்கள் ஆகியும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டத்தை நடத்த முயன்ற தந்தை பெரியார் தி.க.வினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நூதன போராட்டம்
50 நாட்கள் ஆகியும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை என்பதால் மக்கள் படும் துன்பத்தை நினைவு படுத்தும் வகையில் பிரதமர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முடிவு செய்து இருந்தனர்.இதையொட்டி மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், அந்த கட்சியின் நிர்வாகிகள் ஆறுச்சாமி, பிரசாத், கோபால், தமிழரசன், ஆனந்த் உள்பட பலர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 50 நாட்களாக பொதுமக்கள் ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க படாதபாடு படுகின்ற னர். பணத்தட்டுப்பாடு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பிரதமர் மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளார். அடித்தட்டு மக்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இன்னும் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் திடீரென பணத்தை குறைத்துள்ளதால் வங்கிகளில் நாள் முழுக்க காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் போதுமானதாக இல்லை. இந்த பணத்தட்டுப்பாட்டால் தொழில்கள் அனைத்தும் முடங்கி விட்டது. தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
6 பேர் கைது
இந்த நிலையில் கடந்த மாதம்(நவம்பர்) 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் முடிவடைந்து விட்டது.
ஆனால் இன்னும் பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை. ஆனால் பிரதமர் மோடி 50 நாட்களில் பிரச்சினை தீர்ந்து விடும். இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்குவேன் என்று கூறினார். ஆகவே பிரச்சினை இன்னும் தீர்ந்து விடவில்லை என்பதால், அதனை நினைவு கூறும் வகையிலும், பொதுமக்கள் படும் துன்பத்தை விளக்கும் வகையிலும் அவருக்கு தூக்கு கயிறை தபாலில் அனுப்பி வைக்க உள்ளோம்.இதன் பிறகாவது இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறதா? என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள், கையில் தூக்கு கயிறு, மற்றும் அதனை பார்சல் தபாலில் வைத்து அனுப்புவதற்கான அட்டை பெட்டி ஆகியவற்றுடன் அங்கிருந்து அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story