பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் தேவையில்லை மண்டல அதிகாரி தகவல்

கோவை,
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் தேவையில்லை என்று கோவை மண்டல அதிகாரி கூறினார்.
இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் கூறி இருப்பதாவது:-
பிறப்பு சான்றிதழ் தேவையில்லை
பாஸ்போர்ட் வழங்குவதில் உள்ள சில நடைமுறைகளை கொள்கை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எளிமைப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 1980-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின் படி 26.1.1989 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் அவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும். ஆனால் அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், மெட்ரிக்குலேசன் சான்றிதழ், பிறந்த தேதியுடன் பான்கார்டு, பிறந்த தேதியுடன் கூடிய ஆதார் கார்டு, அரசு ஊழியர்களின் சேவை ஆவணம் (சர்வீஸ் ரெக்கார்டு), ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உத்தரவு நகலில் சம்பந்தப்பட்ட அதிகாரி கையெழுத்திட்ட கடிதம், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் ஆவணம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்பு 26.1.1989-க்கு பிறகு பிறந்தவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
சுய உறுதிமொழி
மேலும் 1980-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின்படி பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் முன்பு 15 ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஆனால் அந்த ஆவணங்கள் தற்போது 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய அனைத்து ஆவணங்களுக்கும் விண்ணப்ப தாரர் வெள்ளை தாளில் சுய உறுதிமொழி எழுதி கொடுத்தால் போதுமானது. இதற்காக அட்டஸ்டேசன், நோட்டரி பப்ளிக் ஆகிய சான்றிதழ்கள் தேவையில்லை.
திருமணம் செய்து கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான சான்றிதழ் அளிக்க தேவையில்லை. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் தனது உயர் அதிகாரியிடமிருந்து அனுமதி கடிதம் இனி பெற வேண்டியதில்லை. அதற்கு பதில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருப்பது குறித்து உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தி விட்டதாக வெள்ளை தாளில் சுய உறுதி மொழி கடிதம் கொடுத்தால் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story