புத்தாண்டு தினத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை மாநகர போலீசார் எச்சரிக்கை


புத்தாண்டு தினத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை மாநகர போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 1:52 AM IST)
t-max-icont-min-icon

கோவை, ‘கோவையில் புத்தாண்டு தினத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விபத்தில்லா புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினம் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்தி

கோவை,

‘கோவையில் புத்தாண்டு தினத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில்லா புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு தினம் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்தினம் 31-ந் தேதி இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் இளைஞர்கள் சாலைகளில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வேகமாக செல்வார்கள். அந்த வாகனங்களை ஓட்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் மது குடித்து விட்டு ஓட்டுவதாக புகார்கள் கூறப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டு கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
எனவே வருகிற புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக மாற்ற கோவை மாநகர போலீசார் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளனர். அதன்படி கோவையில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 1 மணிக்கு பின்னர் நடத்தக்கூடாது என்றும் மேடைகள் அமைக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளனர். இதுதவிர கோவையின் முக்கிய சாலைகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வேகமாக செல்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. புத்தாண்டு தினத்தன்று அவினாசி சாலை, திருச்சி சாலை, ஆர்.எஸ்.புரம் உள்பட 22 இடங்களில் வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

200 இடங்களில் எச்சரிக்கை பலகை

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சரவணன் கூறியதாவது:-

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக கோவை மாநகரில் 200 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. முக்கிய சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த எச்சரிக்கை பலகைகளில் கோவை மாநகர போலீசாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படு கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த எச்சரிக்கை பலகைகளை பார்த்த பின்னர் வாகன ஓட்டிகள் புத்தாண்டு தினத்தன்று வாகனங்களை நிதானமாக ஓட்ட வேண்டும். அதையும் மீறி வாகனங்களை அதிக வேகமாக ஓட்டினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாகனங்கள் நீதிமன்றங்களில் அபராதம் செலுத்திய பின்னர் தான் மீட்கப் படும். மேலும் சினிமா தியேட்டர்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்களில் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை கொடுக்க உள்ளோம். அதில் வாழ்த்து செய்தியோடு, எச்சரிக்கை செய்தியும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story