ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒ
தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்று நாற்றாங்கால் பண்ணை, கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிமார் ஓடை முதல் காவல்கரடு வரத்து வாய்கால் தூர்வாரும் பணி, போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூழையனூர் ஊராட்சியில் ரூ.5 கோடியே 34 லட்சம் மதிப்பில் கோட்டூர்-கூழையனூர் இடையே முல்லைப்பெரியாற்றில் கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
ஊராட்சி சேவை மையம்
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வீடுகள் கட்டும் பணி, அழகாபுரி ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பில் விசுவநாதபுரம் முதல் ஓடைபட்டி, ஆணைமலையான்பட்டி இணைப்புச்சாலை வரை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார ஊராட்சி சேவை மையத்தின் கட்டுமானப்பணி ஆகியவற்றை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உ.அம்மாபட்டி ஊராட்சியில் தேசிய சத்துணவுத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டிடப்பணி, தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் உ.அம்மாபட்டி- கோம்பை சாலை பலப்படுத்தும் பணி ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், கருப்பசாமி, சேதுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story