கோழியை காப்பாற்ற சென்ற போது 120 அடி ஆழ கிணற்றில் இறங்கி தவித்த கூலித்தொழிலாளி


கோழியை காப்பாற்ற சென்ற போது 120 அடி ஆழ கிணற்றில் இறங்கி தவித்த கூலித்தொழிலாளி
x
தினத்தந்தி 30 Dec 2016 4:45 AM IST (Updated: 30 Dec 2016 2:28 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே சுமார் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த கோழியை காப்பற்ற கிணற்றில் இறங்கிய கூலித்தொழிலாளி வெளியே வர முடியாமல் தவித்தார். அவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் குறித்த வி

தேனி அருகே சுமார் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த கோழியை காப்பற்ற கிணற்றில் இறங்கிய கூலித்தொழிலாளி வெளியே வர முடியாமல் தவித்தார். அவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கோழியை காப்பாற்ற...

தேனி அருகே உள்ள அன்னஞ்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் காமராஜ் (வயது 27). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு சுமார் 120 அடி ஆழம் கொண்டது. தற்போது இந்த கிணறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

நேற்று காலையில் இந்த கிணற்றில் ஒரு கோழி தவறி விழுந்து விட்டது. இந்த கோழியை மீட்பதற்காக காமராஜ், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். அப்பகுதியை சேர்ந்த சிலர் அவருக்கு உதவியாக கயிறை பிடித்துக் கொண்டனர். கோழியை கயிறு மூலமாக மீட்டனர். பின்னர், காமராஜ் கயிற்றை பிடித்து மேலே ஏற முயற்சி செய்தார். சில அடி தூரம் ஏறிய நிலையில் கயிறு அறுந்து அவர் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் அவர் தவித்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து கிணற்றுக்குள் காயங்களுடன் தவித்த காமராஜை, கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story