திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எல்லை மீறினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எல்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா எச்சரிக்கை விடுத்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் 2017 புத்தாண்டு நாளை மறுநாள் பிறக்கிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்
திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எல்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
2017 புத்தாண்டு நாளை மறுநாள் பிறக்கிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. அந்தவகையில் திருப்பூரிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், எல்லை மீறி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்பவர்களை கண்டறியும் பொருட்டு திருப்பூரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
திருப்பூரில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பொதுமக்களை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கவும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும், முக்கிய பகுதிகளிலும் அதிகமான எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபானம் அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்பவர்களை கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 10 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் முக்கிய இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவ்வாறு குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள், பெண்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குடிபோதையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் அனுமதியை மீறி ஆபாச நடனம், மது விருந்து உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கப்படும். இந்த ஆண்டு திருப்பூரில் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாநகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 13 ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மாநகர காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தந்து 2017 புத்தாண்டு தினத்தை விபத்தில்லா தினமாக கொண்டாட மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு
மாநகர் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான உடுமலை, தாராபுரம், காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லை மீறுபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா தெரிவித்துள்ளார்.

Next Story