சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு தர்மஅடி
ஈரோடு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு தர்மஅடி கொடுக்கப்பட்டதால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). இவ
ஈரோடு,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு தர்மஅடி கொடுக்கப்பட்டதால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). இவர் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியம் பள்ளிப்பாளையம் பகுதியில் வசிக்கும் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது பாலசுப்பிரமணியம் தங்களது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிந்துகொண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலசுப்பிரமணியத்தின் வீட்டிற்கு விரைந்து சென்று அவரை தேடினார்கள். அப்போது அவர் ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்றிருப்பதை தெரிந்துகொண்டனர்.
தர்மஅடி
சிறுமியின் உறவினர் கள் ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று காலை வந்தனர். அப்போது அங்கு வேலை செய்துகொண்டு இருந்த பாலசுப்பிரமணியத்தை அவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். உடனே அங்கிருந்த வியாபாரிகள் அவர் களை தடுத்தனர். ஆனால் ஆத்திரத்துடன் இருந்த சிறுமியின் உறவினர்கள் அவரை விடாமல் தாக்கினார்கள். அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாலசுப்பிரமணியத்தை மீட்டு, சிறுமியின் உறவினர்களை சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியத்தை மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தை போலீசார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை யொட்டி மகளிர் போலீசார் பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர்.

Next Story