பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
அரியலூர், பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ரூ.2,500 லஞ்சம் அரியலூர் மாவட்டம் உடையார்
அரியலூர்,
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ரூ.2,500 லஞ்சம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு கிராம நிர்வாக அதிகாரியாக வைத்தியநாதன் (வயது 56) என்பவர் பணியாற்றினார்.
துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது தாயின் பெயரில் ஒரு இடத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி வைத்தியநாதனிடம் மனு கொடுத்திருந்தார். ஆனால் பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.2,500 லஞ்சம் தர வேண்டும் என சுபாஷ்சந்திரபோசிடம் வைத்தியநாதன் கேட்டார்.
கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஷ்சந்திரபோஸ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் வைத்தியநாதனிடம், சுபாஷ்சந்திரபோஸ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.2,500-ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வைத்தியநாதனை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்து வைத்தியநாதனை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
7 ஆண்டு சிறை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அதிகாரி வைத்தியநாதனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் வைத்தியநாதனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story