புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் மக்கள் தொடர்பு முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பூர், ராப்பூசல், கீழமஞ்சக்குடி ஆகிய 3 இடங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மக்கள் தொடர்பு மு
ஆவுடையார்கோவில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பூர், ராப்பூசல், கீழமஞ்சக்குடி ஆகிய 3 இடங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடர்பு முகாம்
ஆவுடையார்கோவில் தாலுகா கருப்பூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தாசில்தார் பவானி முன்னிலை வகித்தார். முகாமிற்கு தனித்துணை கலெக்டர் சூரியகலா தலைமை தாங்கி 47 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், 14 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 4 பேருக்கு பட்டாமாறுதல் உத்தரவுகளையும், 30 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரசு செந்தில்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காளிமுத்து நன்றி கூறினார்.
இலுப்பூர்
இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு புதுக்கோட்டை உதவி ஆணையர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். முகாமில் முதியோர் உதவித்தொகை கோரி 17 மனுக்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் சம்பந்தமாக 17 மனுக்கள் உள்பட 46 மனுக்கள் பெறப் பட்டன. இதில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து முகாமில் 18 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 5 பேருக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் இலுப்பூர் தனி தாசில்தார் சங்கரகாமேஸ்வரன், தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டைப்பட்டினம்
கோட்டைப்பட்டினம் அருகே உள்ள கீழமஞ்சக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மணமேல்குடி தாசில்தார் சுரேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்பட 42 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 40 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன. மீதம் உள்ள 2 மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வட்ட வழங்கல் அலுவலர் மார்ட்டின், கிராம நிர்வாக அலுவலர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story