தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கரூர், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகன சோதனை கரூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து
கரூர்,
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாகன சோதனை
கரூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து விபத்துகளை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ சேகரன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஆனால் வாகன விபத்துகள் குறையவில்லை. இந்த நிலையில் தலைக்கவசம் அணியாமல், அதிக வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
நடவடிக்கை
இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 603 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று அதி வேகமாக வாகனம் ஓட்டிய 45 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 25 பேர் மற்றும் மற்ற வழக்குகள் 261 என மொத்தம் ஒரே நாளில் 934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கரூரில் வாகன விபத்துகளால் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு சாலை விதிகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இனி தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story