மோட்டார் சைக்கிள் திருட்டு; 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2016 5:11 AM IST (Updated: 30 Dec 2016 5:10 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் ஷீசாந்த் (வயது 24). நேற்று முன்தினம் இவர் தன்னுடைய வீட்டின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கினார். நேற்று காலையில் எழுந்து

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் ஷீசாந்த் (வயது 24). நேற்று முன்தினம் இவர் தன்னுடைய வீட்டின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஷீசாந்த் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சகோதரர்களான சுப்பிரமணி (வயது 35), மணிகண்டன் (25), ஆறுமுகம் (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டது.


Next Story