திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்

திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 30 Dec 2016 5:35 AM IST (Updated: 30 Dec 2016 5:35 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் தும்பைக்குளத்திற்கு ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் திரவியம் என்பவர் ஓட்டி சென்றார்.

திருமங்கலம்,

திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் தும்பைக்குளத்திற்கு ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் திரவியம் என்பவர் ஓட்டி சென்றார்.

அரசபட்டி அருகே உள்ள ரெயில் தண்டவாளம் அருகே வந்தபோது, பஸ் திடீரென பழுதாகி தண்டவாளத்தின் நடுவில் நின்று விட்டது. டிரைவர் பஸ்சை இயக்க பல முறை முயன்றும் பலனின்றி, பஸ்சை நகர்த்த முடியவில்லை.

இதுகுறித்து டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு பஸ்சை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரெயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரெயில் ஆகியன திருமங்கலம் ரெயில் நிலையத்திலும், நெல்லை-மயிலாடுதுறை ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.

பின்னர் 2 மணி நேர தாமதத்திற்கு பின்பு ரெயில்கள் புறப்பட்டு சென்றன. 

Next Story