ஊத்துக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு


ஊத்துக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 30 Dec 2016 5:35 AM IST (Updated: 30 Dec 2016 5:35 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் புறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு கிராமத்தை சேர்ந்த நடராஜன் (வயது 54) லாரியை ஓட்டினார்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் சாவு

கும்மிடிப்பூண்டியில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் புறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு கிராமத்தை சேர்ந்த நடராஜன் (வயது 54) லாரியை ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரிஞ்சேரியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி விவசாயி முருகையா என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் நடராஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த உடன் பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராட்சத கிரேனை வரவழைத்து சுமார் 7 மணி நேரம் போராடி சிமெண்டு கலவை லாரியை சாலை ஓரமாக அப்புறப்படுத்தி லாரிக்குள் சிக்கி உயிரிழந்த டிரைவர் நடராஜனின் உடலை வெளியே எடுத்தனர். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு விபத்து

பஞ்சாபில் இருந்து பிளாஸ்டிக் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பஞ்சாபை சேர்ந்த டிரைவர் சலாமுத்தின் (24) லாரியை ஓட்டினார். நேற்று அதிகாலை ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள தொம்பரம்பேடுவில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் சலாமுத்தின் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story