கே.எம்.ஜி. கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் த.கஜபதி, முதல்வர் ஜெயஸ்ரீராணி ஆகியோர் முன்னிலை வக
குடியாத்தம்,
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் த.கஜபதி, முதல்வர் ஜெயஸ்ரீராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலியோ விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் அம்மணாங்குப்பம் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்றது. ஊர்வலத்தில் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ரகுவர்மன் செய்திருந்தார்.
Next Story