தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜனவரி 6–ந்தேதி தொடங்குகிறது
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி 6–ந்தேதி தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி 6–ந்தேதி தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விளையாட்டு போட்டி
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வு போட்டிகள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் ஜனவரி 6–ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் போட்டியில், தடகளம், டேக்வாண்டோ, வாலிபால், பளு தூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல், டேபிள் டென்னிஸ், கபடி மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
தேர்வு போட்டிகள்
2–ம் நாள் போட்டியில்(ஜனவரி 7–ந் தேதி) சைக்கிளிங், கூடைப்பந்து, ரெஸ்லிங், ஜிம்னாஸ்டிக், கோ–கோ, வுஷு, கைப்பந்து, ஆக்கி, கால்பந்து, வில் வித்தை மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு போட்டிகளாகவும் நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொள்பவர்கள் 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொள்வோர் 1.1.2000 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
வங்கி கணக்கு
தடகளம், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல், டேபிள் டென்னிஸ், கபடி மற்றும் டென்னிஸ் ஆகிய போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.350–ம், 2–வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.250–ம், 3–வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.150–ம் வழங்கப்பட உள்ளது.
இந்த பரிசுத் தொகை சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால், வீரர்கள் தங்கள் வயதுக்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வர வேண்டும். மேலும் வங்க புத்தகத்தின் முதல் பக்க நகலை கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கு தொடங்கி, அந்த புத்தகத்தின் முதல்பக்க நகலை கொண்டு வர வேண்டும்.
தேசிய போட்டி
போட்டியில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கும், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அரசுச் செலவினத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
எனவே போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியுடைய வீரர், வீராங்கனைகள் ஜனவரி 6–ந்தேதி காலை 8 மணி வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461–2321149 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story