திருப்புவனம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு 3 பேர் மீட்கப்பட்டு, பள்ளி செல்ல நடவடிக்கை
திருப்புவனம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, கடைகளில் பணிபுரிந்த 3 பேர் மீட்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு சிவகங்கை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிசெல்வி, முதன்மை
சிவகங்கை,
திருப்புவனம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, கடைகளில் பணிபுரிந்த 3 பேர் மீட்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வுசிவகங்கை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிசெல்வி, முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலகுழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் ஆகியோர் கொண்ட மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு சிறப்புக்குழு திருப்புவனம் பகுதியில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணி திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் இடங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள், ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்புகள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் திடீர் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, 14 வயதுக்கு மேற்பட்ட 3 வளர்இளம் பருவத்தினர் பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமல், குழந்தை தொழிலாளர்களாக கடைகளில் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை மீட்ட அதிகாரிகள், தொடர்ந்து பள்ளிக்கு சென்று கல்வி பயில மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழிவகை செய்யப்பட்டது.
ஒத்துழைப்புமேலும் இதுதொடர்பாக சிவகங்கை தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிசெல்வி கூறியதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப் உரிமையளார்கள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எவரையும் பணியில் அமர்த்த கூடாது. மேலும் சிவகங்கை மாவட்டம் “குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக“ தொடர்ந்து நீடிப்பதற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரேனும் பணிபுரிவது கண்டறியப்பட்டால், அதுகுறித்து பொதுமக்கள் தொழிலாளர் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.