பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நாளை நடக்கிறது
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது. சிறப்பு வழிபாடு திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி குடவரை கோவிலான கற்பக விநாயகர் கோவிலில் நாளை(1–ந்தேதி) புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற உள்
திருப்பத்தூர்,
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சிறப்பு வழிபாடுதிருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி குடவரை கோவிலான கற்பக விநாயகர் கோவிலில் நாளை(1–ந்தேதி) புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டையொட்டி இந்த திருத்தலத்தில் வழிபாடு செய்வது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் வட நாட்டினரும் தவறாமல் புத்தாண்டு தரிசனம் செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இந்தநிலையில் நாளை புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து பகல் முழுவதும் கோவில் நடை சாத்தப்படாமல் திறந்திருக்கும். மேலும் நாளை முழுவதும் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
ஏற்பாடுகள்மேலும் பக்தர்களின் கூட்டத்தினை சமாளிக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நிர்வாகம் சார்பில் நிழற்கூரை அமைக்கப்பட்டு, மக்கள் வரிசையாக நின்று செல்வதற்கும், சாமி தரிசனத்திற்கு பிறகு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிள்ளையார்பட்டி ஊராட்சி சார்பில் தண்ணீர் வசதி மற்றும் முழு சுகாதார முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டும், காவல்துறை சார்பில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்கின்றனர்.
இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர்கள் நச்சாந்துப்பட்டி பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி மாணிக்கவாசகம் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.