ஆதார் கார்டு பெற சிறப்பு ஏற்பாடுகள் கலெக்டர் மலர்விழி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் அட்டை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளர். சிறப்பு ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் ஆதார்
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் அட்டை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளர்.
சிறப்பு ஏற்பாடுகள்சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் பதிவு செய்யும் நிரந்தர மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நகராட்சி அலுவலகங்களில் உள்ளன. இவைகளில் ஞாயிறு, அரசு விடுமுறை தவிர அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆதார் கார்டுக்கு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் காரைக்குடி, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் கூடுதலாக ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் உதவி மையம் உள்ளது. ஏற்கனவே, ஆதார் பதிவு செய்து இதுவரை ஆதார் கார்டு கிடைக்க பெறாதவர்கள் தங்கள் கைவசம் உள்ள ஒப்புகை ரசீதை இந்த மையத்திற்கு கொண்டு சென்று, அதில் உள்ள பதிவு எண், தேதி, நேரம், பெயர், அஞ்சலக குறியீட்டு எண், ஏற்கனவே அளித்துள்ள அலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து, கிடைக்க பெறும் அலைபேசி குறுந்தகவல் கடவுச்சொல் இலக்கத்தை மீண்டும் பதிவு செய்யும்போது ஆதார் எண் கிடைக்க பெறும். அதனை வைத்து ஆதார் கார்டு பெற்று கொள்ளலாம்.
ஆதார் கார்டுஇதில் ஆதார் பதிவு ஒப்புகை ரசீதில் உள்ள அலைபேசி எண்ணிற்கு கடவுச்சொல் எண் வரும் என்பதால் அலைபேசியைத் தவறாது கொண்டு செல்ல வேண்டும். மேற்படி ஆதார் ஒப்புகை ரசீது கிடைக்க பெறாதவர்கள் பெயர், அஞ்சலக குறியீட்டு எண் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை நேரில் ஆதார் உதவி மையத்தில் தெரிவித்தால் ஆதார் எண் வழங்கப்படும். ஆதார் எண் கிடைக்க பெற்றவர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ–சேவை மையங்களில் கை கட்டை விரல், ரேகையை பதிவு செய்து ரூ.30 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இதுவரை ஆதார் பதிவு செய்யாத 5 வயதிற்கு மேற்பட்டோர் ஆதார் பதிவு படிவம், குடும்ப அட்டை, பிறப்புச் சான்று ஆகியவற்றை கொண்டு சென்று மேற்கண்டுள்ள மையங்களில் உடனே பதிவு செய்து கொள்ளளலாம்.
இவ்வர்று அவர் கூறியுள்ளார்.