மொரப்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்க காசுகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


மொரப்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்க காசுகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:00 AM IST (Updated: 30 Dec 2016 7:59 PM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்க காசுகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அம்மன் கோவில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நல்லியம்மன் கோவில் உள

மொரப்பூர்,

மொரப்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்க காசுகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்மன் கோவில்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். அம்மன் கோவிலில் பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கோவிலில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் தங்க காசுகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து கோவில் நிர்வாகி சொக்கலிங்கம் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல், சப்–இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பையன், நீலதங்கம் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்க காசுகளை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story