கெண்டேனஅள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 187 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்
கெண்டேனஅள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 187 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார். மக்கள் தொடர்பு முகாம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கெண்டேனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர்
பென்னாகரம்,
கெண்டேனஅள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 187 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கெண்டேனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முகாமில் 187 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் முன்மாதிரி கிராமமாக 10 கிராமங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் கெண்டேனஅள்ளி கிராமமும் ஒன்றாகும். இந்த கிராமத்தில் பல்வேறு துறையின் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். பொதுமக்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் தெரிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் பேசினார்.
கண்காட்சிமுகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் கலெக்டர் விவேகானந்தன் பார்வையிட்டார்.
இந்த முகாமில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, ஆதிதிராவிடர் நல அலுவலர் இலாஹிஜான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலை இணை இயக்குனர் பழனிசாமி, மாவட்ட தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், தாசில்தார் மாரிமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.