தர்மபுரியில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி


தர்மபுரியில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி
x
தினத்தந்தி 31 Dec 2016 3:30 AM IST (Updated: 30 Dec 2016 8:04 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் ரேணுகா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பே

தர்மபுரி,

தர்மபுரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் ரேணுகா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், கூட்டுறவுத்துறை தொலை நோக்குப்பார்வை, துறையின் குறிக்கோள், குறியீடு எய்தலில் சார்நிலை அலுவலர்களின் பங்கு குறித்து விளக்கி பேசினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை எப்படி ஆய்வு செய்வது தொடர்பான விளக்கங்களை கள அலுவலர்களுக்கு நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் துறை அலுவலர்கள் ஆற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து அவர் விளக்கி கூறினார். இந்த பயிற்சியில் தர்மபுரி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணிகண்டன், தர்மபுரி கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் பழனிசாமி, கூட்டுறவு தணிக்கை அலுவலர் முருகேசன், கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த பயிற்சியில் கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story