உணவுப்பொருட்களை பொட்டலமிட அச்சிடப்பட்ட செய்திதாள்களை பயன்படுத்த கூடாது கலெக்டர் கதிரவன் தகவல்


உணவுப்பொருட்களை பொட்டலமிட அச்சிடப்பட்ட செய்திதாள்களை பயன்படுத்த கூடாது கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:30 AM IST (Updated: 30 Dec 2016 8:07 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப்பொருட்களை பொட்டலமிட அச்சிடப்பட்ட செய்திதாள்களை பயன்படுத்த கூடாது என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தடை செய்யப்பட்டுள்ளது தினசரி மக்கள் க

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப்பொருட்களை பொட்டலமிட அச்சிடப்பட்ட செய்திதாள்களை பயன்படுத்த கூடாது என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தடை செய்யப்பட்டுள்ளது

தினசரி மக்கள் கூடும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் வழங்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பரிமாறப்படுவது மற்றும் பொட்டலமிடுவது இந்திய அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையரகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டி கடைகள், டீக்கடைகள், உணவு விடுதிகளில், வீடுகளில் கூட வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, செய்தி தாள்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயல் உடல் நலத்திற்கு தீங்கானது.

புகார் தெரிவிக்கலாம்

எனவே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் செய்தி தாள்கள் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்யவோ எண்ணெய் பிழியவோ, உண்ண பயன்படுத்தவோ நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே டீக்கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், எண்ணெய் பலகாரக்கடைகள் மற்றும் அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில், செய்திதாள் மற்றும் அது தொடர்பான பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யவோ, உண்பதற்கு வழங்கவோ கூடாது.

அவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம். அது குறித்த புகார்கள் எதுவும் இருப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story