ஓசூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த 4 காட்டு யானைகள் வனத்துறையினர் விரட்டினர்
ஓசூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டினார்கள். காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 4 காட்டு யானைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே உள்
ஓசூர்,
ஓசூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டினார்கள்.
காட்டு யானைகள்கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 4 காட்டு யானைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டிற்கு வந்தன. அந்த யானைகள் அங்கிருந்து ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர்பள்ளம் சென்று அங்குள்ள காட்டில் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போடூர்பள்ளம் காட்டில் இருந்து உணவுக்காக அந்த 4 யானைகளும் வெளியே வந்தன. அந்த யானைகள் அருகில் உள்ள குக்கலப்பள்ளி, ஒட்டர்பாளையம், பன்னப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தன. அங்கு விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள், பன்னப்பள்ளியில் உள்ள தைலத்தோப்பிற்கு நேற்று காலை சென்றன.
விரட்டியடிப்புஅங்கிருந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினார்கள். இதைத் தொடர்ந்து 4 யானைகளும் சிபிரிகொட்டாய் பகுதிக்கு சென்றன. அங்கு தென்பெண்ணை ஆற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் ஆனந்த குளியல் போட்டன. இதன் பிறகு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெளியேறிய யானைகள் ஆழியாளம் வழியாக விவசாய நிலங்களுக்குள் சென்றன.
இந்த நிலையில் யானைகள் வந்த தகவல் அறிந்ததும், ஆழியாளம், ராமாபுரம் பகுதி பொதுமக்கள் அங்கு சென்று யானைகளை வேடிக்கை பார்த்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கூக்குரல் எழுப்பி, யானைகளை விரட்டினார்கள். தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து 4 யானைகளையும் போடூர்பள்ளம் காட்டிற்கு விரட்டினார்கள்.
தற்போது போடூர்பள்ளம் காட்டில் முகாமிட்டுள்ள இந்த 4 யானைகளையும் சானமாவு காட்டிற்கு விரட்டி, அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த யானைகளை விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.