பெட்டமுகிலாளம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


பெட்டமுகிலாளம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Dec 2016 3:30 AM IST (Updated: 30 Dec 2016 8:10 PM IST)
t-max-icont-min-icon

பெட்டமுகிலாளம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். மருத்துவ முகாம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் கிராமத்தில் மாவட்ட காவல்துறை, காவேரிப்பட்டணம் பெண்ணார் அரிமா சங்கம், ஜே.சி.ஐ. காவேரி

தேன்கனிக்கோட்டை,

பெட்டமுகிலாளம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் கிராமத்தில் மாவட்ட காவல்துறை, காவேரிப்பட்டணம் பெண்ணார் அரிமா சங்கம், ஜே.சி.ஐ. காவேரிப்பட்டணம், ஓசூர் ஸ்ரீசந்திரசேகரா பல்நோக்கு மருத்துவமனை, ஓசூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் மலை வாழ் மக்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் இதயம், எலும்பு, கண் பரிசோதனை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.

நிவாரண பொருட்கள்

இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மலை வாழ் மக்களுக்கு குளிர்கால ஆடைகள், போர்வைகள், வலி நிவாரண பொருட்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த முகாமில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம், அஞ்செட்டி வனச்சரகர் தனபால், ஜவளகிரி வனச்சரகர் அன்பழகன், உரிகம் வனச்சரகர் திருமுருகன் மற்றும் போலீசார், வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story