நாமக்கல்லுக்கு 2,560 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் வந்தது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று காலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோடு பகுதியில் இருந்து 41 வேகன்களில் 2,560 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று காலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோடு பகுதியில் இருந்து 41 வேகன்களில் 2,560 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த மக்காச்சோள மூட்டைகள் நாமக்கல் ரெயில்வே கூட்ஸ்ஷெட் அசோசியேசனுக்கு சொந்தமான 150–க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல் நேற்று மாலையில் மராட்டிய மாநிலம் அமராவதி பகுதியில் இருந்து 1,300 டன் சோயா புண்ணாக்கு சரக்கு ரெயில் மூலம் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
Next Story