பள்ளிபாளையத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை போலீசார் விசாரணை
பள்ளிபாளையத்தில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை பிரிந்தவர் பள்ளிபாளையம் பூலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (வயது 33). விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையத்தில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரை பிரிந்தவர்பள்ளிபாளையம் பூலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (வயது 33). விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகர் என்பவருடன் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்திராணி கணவரை பிரிந்து, பூலக்காட்டூரில் சித்தேஸ்வரன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். சித்தேஸ்வரன் குடிப்பழக்கம் உள்ளவர். இது தொடர்பாக அவருக்கும், இந்திராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலைஇந்த நிலையில் நேற்று முன்தினமும் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இந்திராணி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை கீழே இறக்கி உடனடியாக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இந்திராணி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இந்திராணியின் தந்தை சின்னதம்பி கொடுத்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.