கடலூர் பஸ் நிலையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்


கடலூர் பஸ் நிலையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:00 AM IST (Updated: 30 Dec 2016 8:27 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் பஸ் நிலையத்தில் குப்பை மேடுகள் அதிகமாக இருந்தது. சாக்கடை நீரும் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதி அடைந்தனர். பயணிகள் காத்திருப்பு கூடமும் சீரமைக்கப்படாமல் உள்ளது. கொசுத்தொல

கடலூர்,

கடலூர் பஸ் நிலையத்தில் குப்பை மேடுகள் அதிகமாக இருந்தது. சாக்கடை நீரும் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதி அடைந்தனர். பயணிகள் காத்திருப்பு கூடமும் சீரமைக்கப்படாமல் உள்ளது. கொசுத்தொல்லையாலும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து பஸ் நிலையத்தை சீரமைத்து தர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதை கண்டித்து நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் கொசு மருந்து அடித்தும், குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் ராஜேஷ், இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அமர்நாத், நகர செயலாளர் தமிழ்மணி, நகர பொருளாளர் அரசன், மாணவர் சங்க நகர செயலாளர் நிர்மல்குமார், ஜனநாயக வாலிபர் சங்க நகர துணை செயலாளர் நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story