கடலூரில் விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை


கடலூரில் விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2016 4:45 AM IST (Updated: 30 Dec 2016 9:45 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடலூரில் விடுதி மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். உள்ளிருப்பு போராட்டம் கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே ஆதிதிராவிட நல மாணவர்கள் விடுதி அ

கடலூர்,

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடலூரில் விடுதி மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டம்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே ஆதிதிராவிட நல மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது. இதில் 88 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி நேற்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு திடீரென விடுதிக்குள் பெட்டி, படுக்கைகளுடன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஊக்கத்தொகை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

அப்போது விடுதிக்கு நிரந்தர வார்டன் நியமிக்க வேண்டும். காவலாளி நியமிக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். முதலுதவி பெட்டி வைக்க வேண்டும். பாய், போர்வை, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் கலால் உதவி ஆணையர் முத்துக்குமாரசாமி, தாசில்தார் அன்பழகன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் மாணவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் மாணவர்களின் இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story