உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்


உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:30 AM IST (Updated: 30 Dec 2016 10:35 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீரென இறந்தார். இது தொடர்பாக அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடும்ப அறுவை சிகிச்சை உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீரென இறந்தார். இது தொடர்பாக அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடும்ப அறுவை சிகிச்சை

உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 30). இவருடைய மனைவி சுதா (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதா மீண்டும் கர்ப்பமடைந்தார். இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான சுதா பிரசவத்துக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 9–ந்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து சுதா மருத்துவமனையில் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக சுதா மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இடத்தில் சுதாவுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சுதா நேற்று மருத்துவமனையில் திடீரென இறந்தார். இதையறிந்த சுதாவின் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அவர்கள் சுதாவுக்கு சரியான முறையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதன் காரணமாகவே அவர் இறந்து விட்டார் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, அங்குள்ள சென்னை– திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பு

இதையடுத்து கள்ளக்குறிச்சி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெமினி, தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட சுதாவின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், சுதாவின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணையில் டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்க வில்லை என்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று சுதாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story