பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் தி.மு.க. சார்பில் நடந்தது


பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் தி.மு.க. சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 31 Dec 2016 4:30 AM IST (Updated: 30 Dec 2016 10:39 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, மாவட்ட துணைத்தலைவர்கள் கார்த்திக், ராமகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வறட்சி பாதித்த மாநிலம்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். சம்பா பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் சேகர்கலியபெருமாள், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் வாரைபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம்தேவா நன்றி கூறினார்.

Next Story