பெண்ணை கத்தியால் குத்திய மீனவர் கைது


பெண்ணை கத்தியால் குத்திய மீனவர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2016 3:30 AM IST (Updated: 30 Dec 2016 10:51 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய மீனவரை போலீசார் கைது செய்தனர். மீனவர் ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே உள்ளது நம்பியான் வலசை. இந்த ஊரைச்சேர்ந்த ஆண்டி மகன் முனியசாமி (வயது 42). மீனவரான இவர் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகிறார். இவ

ராமநாதபுரம்,

குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய மீனவரை போலீசார் கைது செய்தனர்.

மீனவர்

ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே உள்ளது நம்பியான் வலசை. இந்த ஊரைச்சேர்ந்த ஆண்டி மகன் முனியசாமி (வயது 42). மீனவரான இவர் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன. முனியசாமி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தி வந்தாராம்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப தகராறில் முருகேசுவரி கணவனுடன் கோபித்து கொண்டு தனது உறவினர் ராஜம்மாள்(46) வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் இருந்து வந்தாராம். இதனை அறிந்த முனியசாமி அங்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

கைது

இதனை கண்ட முருகேசுவரியின் உறவினர் ராஜம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி ராஜம்மாள் தான் தனது மனைவி பிரிந்து வந்ததற்கு காரணம் என்று கூறி அவரை தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேதவள்ளி வழக்குபதிவு செய்து முனியசாமியை கைது செய்தார்.


Next Story